பிரியங்கா நல்காரி ஹைதராபாத்தை பூர்வீகமாகக் கொண்ட இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். 2010 இல், சந்திர சித்தார்த்தா இயக்கிய அந்தரி பந்துவாயா என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். கிக் 2 (2015) படத்திலும் அவர் ஒரு அங்கீகரிக்கப்படாத பாத்திரத்தில் நடித்தார்.

காஞ்சனா 3 (2019) பிரியங்கா நல்கரியின் முதல் சிறப்பு கோலிவுட் படம். 2018 ஆம் ஆண்டில், ரோஜா என்ற தமிழ் சீரியலில் நடித்ததன் மூலம் அவர் வெளிச்சத்திற்கு வந்தார். இந்த சீரியல் கிரிஞ்ச் மேக்ஸ் ஆக இருந்தாலும், சீரியல் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதிலும் பிரியங்காவின் எக்ஸ்பிரஷன்கள் சில ஆண் ரசிகர்களைக் கவர்ந்தது.

அதனால் அவரை சமூகவலைதளத்தில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகமானது. சீரியலில் இழுத்திப் போர்த்திக்கொண்டு நடித்தாலும் சமூகவலைதளங்களில் மாடர்னாக உலாவந்தார்.
முன்னதாக, ஈடிவி தெலுங்கில் ஒளிபரப்பான மேகமாலா என்ற தெலுங்கு சீரியலில் அவர் நடித்தார். அவர் நகைச்சுவை ரியாலிட்டி ஷோ அனுபவிஞ்சு ராஜாவிலும் நடித்துள்ளார். ஷிவா மனசுலோ ஸ்ருதி (2012) படத்தில் சுதீர் பாபுவின் சகோதரி வேடத்திலும் நடித்தார்.

சமீபத்தில் தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டார். தன்னுடைய வீட்டாரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டிருக்கிறார் நல்காரி என்று தெரிகிறது.
ஆனால் பிரியங்கா தொடர்ந்து நடிப்பது அவரது கணவர் ராகுலுக்கு பிடிக்கவில்லை என அரசல் புரசலாக செய்திகள் வெளியாகின. இதனால் அவர் சில சீரியல்களில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் திடீரென அவர் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய கணவரோடு பகிர்ந்திருந்த புகைப்படங்களை திடீரென நீக்கினார்.

இதையடுத்து இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் நீங்கள் இப்போது சிங்கிளாக என்று கேட்டிருந்தார். அதற்கு அவர் ஆமாம் என்று பதிலளித்துள்ளார். இதன் மூலம் தனது கணவரை பிரியங்கா பிரிந்திருப்பது உறுதியாகியுள்ளது. திருமணம் ஆன ஒரே ஆண்டில் அவரின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
