Thursday, April 30, 2026
Home > Cinema > ஹாய் காய்ஸ் திடீர்னு ரெண்டாவது கல்யாணம் ஆகிடுச்சு… சாண்டியின் முன்னாள் மனைவி பகிர்ந்த போட்டோ!

ஹாய் காய்ஸ் திடீர்னு ரெண்டாவது கல்யாணம் ஆகிடுச்சு… சாண்டியின் முன்னாள் மனைவி பகிர்ந்த போட்டோ!

சன் ம்யூசிக் தொலைக்காட்சியில் பிரபல வீடியோ ஜாக்கியாக இருந்தவர் காஜல் பசுபதி. அந்த பிரபலத்தின் மூலம் சினிமா மற்றும் சீரியல்களில் நடித்தார். அவர் நடிகையாக அறிமுகமாகியது கமல்ஹாசன் நடித்த வசூல் ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில்தான். அதன் பின்னர் கோ, டிஸ்யூம் உள்ளிட்ட ஏராளமான படங்களிலும் சீரியல்களிலும் நடித்துள்ளார். சிங்கம். கோ. மௌனகுரு. கௌரவம். இரும்பு குதிரை கலகலப்பு2  என பல படங்களில் நடித்தார்.

இதையடுத்து அவர் நடன இயக்குனர் சாண்டியை காதல் திருமணம் செய்துகொண்டார். அவர்கள் இருவரும் திருமணம் ஆனாலும் பெற்றொருக்கு தெரியாமல் ரகசியமாகதான் வாழ்ந்து வந்தார்கள். ஆனால் பின்னர் அவர்கள் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். இதையடுத்து வேறு ஒரு திருமணம் செய்துகொண்டார். அவருக்கு இப்போது ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

ஆனால் காஜல் வேறு திருமணம் செய்துகொள்ளாமல் தனியளாக இருந்து வந்தார். ஒரு நேர்காணலில் சாண்டியோடு இப்போதும் நல்ல உறவிலேயே இருந்து வருவதாக அவர் கூறியிருந்தார். மேலும் சாண்டியின் மனைவியோடும் நல்ல உறவில் இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இப்போது காஜல் தான் இரண்டாம் திருமணம் செய்துகொண்டதாக ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து தெரிவித்துள்ளார். மேலும் இது திடீரென்று முடிவான கல்யாணம் என்பதால் யாரையும் அழைக்க முடியவில்லை என்றும் வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.