இந்திய நடிகைகளில் உலக அழகி பட்டம் பெற்றவர்களில் ஒருவர் ஐஸ்வர்யா ராய். அதன் பின்னர் அவர் மணிரத்னமால் இருவர் படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். அதன் பின்னர் பாலிவுட் சென்ற அவர் பல படங்களில் பல முன்னணி நடிகர்களோடு நடித்து சூப்பர் ஸ்டார் நடிகையாக வலம் வந்தார்.
அவரின் புகழுக்கு அவர் அடிக்கடி காதல் கிசுகிசுக்களில் சிக்கியது முக்கியக் காரணமாகியது. முதலில் சல்மான் கானோடு ஐஸ்வர்யா ராய் லிவிங் டு கெதரில் வாழ்ந்தார். ஆனால் சல்மான் கானின் முரட்டுத் தனமான குணம் காரணமாக அவரைப் பிரிந்தார்.
பின்னர் இளம் நடிகரான விவேக் ஓப்ராயுடன் காதலில் விழுந்தார். ஆனால் அந்த காதல் சல்மான் கானுக்கு பிடிக்காததால் விவேக் ஓப்ராயை கூப்பிட்டு மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது. அதன் பின்னர் அவர்கள் காதலும் பிரிய, ஐஸ்வர்யா ராய் சினிமா மார்க்கெட்டில் உச்சத்துக்கு செல்ல, விவேக் ஓப்ராய் அதல பாதாளத்துக்கு சென்றார்.
அதன் பின்னர்தான் ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சன் இடையே காதல் மலர்ந்து அவர்கள் திருமணம் செய்துகொண்டார். அவர்களின் காதலுக்கு அப்போதே அபிஷேக் பச்சன் குடும்பத்தில் எதிர்ப்பு எழுந்ததாக சொல்லப்பட்டது. அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராயை விட வயதில் இளையவர் என்பதும் ஒரு காரணமாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் இவர்களின் திருமண வாழ்க்கை இப்போது சுமூகமாக செல்லவில்லை என சொல்லப்படுகிறது. இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் தனித்தனியாகதான் வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. ஐஸ்வர்யா ராய் தன்னுடைய மகளுக்காகதான் ஒரே வீட்டில் வாழ்ந்து வருவதாகவும் சினிமா கிசுகிசு ஸ்பெஷலிஸ்ட் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் ஒரு வீடியோவில் பேசியுள்ளார்.
