கேரளாவை பூர்வீகமாக கொண்ட விந்துஜா விக்ரமன் தமிழ் மற்றும் மலையாள சீரியல்களில் நடித்து பிரபலமானவர். சீரியலில் பெற்ற புகழை விட இவர் இன்ஸ்டாகிராமில் பெற்ற புகழ்தான் மிகவும் அதிகம்.

தனது நடிப்பு வாழ்க்கை காமெடி ஷோவான பின் பெஞ்சர்ஸ் என்பதின் மூலம் தொடங்கினார். பரஸ்பரம் மற்றும் காலிகண்டகி உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார். பொண்ணுக்கு தங்க மனசு சீரியல் மூலமாக தமிழில் அறிமுகமானார்.

அந்த சீரியலில் நடித்து வந்த ராதிகா ராவ் விலகிக் கொண்டதை அடுத்து விந்துஜா அந்த வேடத்தில் நடித்தார். அந்த சீரியலில் விந்துஜாவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

சீரியலில் குடும்பப் பெண்ணாக இழுத்து போத்துக்கொண்டு நடிக்கும் விந்துஜா, இன்ஸ்டாகிராமுக்கு வந்தால் அல்ட்ரா மாடர்ன் யுவதியாக மாறிவிடுவார். மாட்ர்ன் டிரஸ்ஸில் அவர் எடுத்து வெளியிடும் புகைப்படங்களுக்கென்றே ஒரு ரசிகர் கூட்டம் உருவாகியுள்ளது.

அப்படி அவர் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்த சில கலக்கல் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு..

