Sunday, April 19, 2026
Home > Cinema > நம்ம ரென்டு பேரும் உறவில் இருக்கலாம் !! பெண் போடியாளரிடம் விஷ்ணு செய்த செயல் !! வைரல் வீடியோ

நம்ம ரென்டு பேரும் உறவில் இருக்கலாம் !! பெண் போடியாளரிடம் விஷ்ணு செய்த செயல் !! வைரல் வீடியோ

தொலைக்காட்சி வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி. தொடர்ந்து 7 சீசன்களாக நடந்து வரும் பிக்பாஸ் இந்த சீசனில் அவ்வளவாக சூடுபிடிக்கவில்லை. அதனால் செயற்கையாகவே பல பரபரப்புகளை உருவாக்கி வருகின்றனர்.

ஆரம்பத்தில் பவா செல்லத்துரையை அனைவரும் டார்கெட் செய்து வெளியேற்றியது, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி பிரதீப் ஆண்டனியை வெளியேறியது என சர்ச்சைகள் காரணமாக பிக்பாஸ் கவனம் பெற்று வருகிறது.

ஆனால் ப்ரதிப் வெளியேற்றப்பட்ட பின்னர் ஜோவிகா “நாங்கள் அப்படி எதுவுமே சொல்லவில்லை. கமல்சார்தான் அப்படி சொல்லி ப்ரதிப்புக்கு ரெட் கார்ட் கொடுத்தார்.” எனப் பேசியுள்ளார். இந்நிலையில் மீண்டும் ப்ரதீப் பிக்பாஸ் வீட்டுக்குள் திரும்ப உள்ளார் என தகவல்கள் வெளியாகின. ஆனால் அதற்கான அறிகுறிகள் எதுவும் இப்போது வரை தெரியவில்லை.

சண்டை சர்ச்சைகள் ஓய்ந்துள்ள நிலையில் இப்போது காதல் எபிசோட்கள் பிக்பாஸ் வீட்டில் களைகட்ட ஆரம்பித்துள்ளன. முன்பு ஐஷுவும் நிக்சனும் ஒன்றாக வலம் வந்த நிலையில் ஐஷு எவிக்ட் ஆகிவிட்டதால், இப்போது விஷ்ணு பூர்ணிமா ஜோடியின் மீது கவனம் விழுந்துள்ளது.

சில வாரங்களுக்கு முன்னர் விஷ்ணுவிடம் பூர்ணிமா ப்ரபோஸ் பண்ணுவது போல அமைந்துள்ளது. அதில் பூர்ணிமா “நீங்க ஒன்னு பண்றீங்கல்ல அது எனக்கு புடிச்சிருக்கு.. நான் ஒன்னு சொல்லுவேன் ஒங்களுக்கு பிடிக்கலன்னா நீங்க சொல்லிடலாம். எனக்கு ஒங்க மேல பீலிங் இருக்கு” எனக் கூறியது பரபரப்பைக் கிளப்பியது.

இந்நிலையில் இப்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோவில் அனன்யா தன்னிடம் விஷ்ணு ரிலேசஷன்ஷிப்பில் இருக்கலாமா என கேட்டதாக கூறியுள்ளார். அதில் “விஷ்ணு என்கிட்ட வந்து நாம ரெண்டு பேரும் ரிலேஷன்ஷிப்பில் இருக்கலாமா எனக் கேட்டார். ஆனால் அதற்கு நோ சொல்லிவிட்டேன்.” எனக் கூறியுள்ளார். ஆனால் இது விஷ்ணுவின் ஒரு கேம் ப்ளான் என சக போட்டியாளரள் அனன்யாவிடம் கூறியுள்ளனர்.

இதனால் பிக்பாஸ் அடுத்தடுத்த எபிசோட்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.