Friday, April 17, 2026
Home > Cinema > 3 வயது அதிகம் பரவாயில்லை !! திருமணத்துக்குப் பிறகு அது மட்டும் வேண்டாம்… வருங்கால மருமகளுக்கு தம்பி ராமையா போட்ட கண்டீஷன்!

3 வயது அதிகம் பரவாயில்லை !! திருமணத்துக்குப் பிறகு அது மட்டும் வேண்டாம்… வருங்கால மருமகளுக்கு தம்பி ராமையா போட்ட கண்டீஷன்!

தமிழ் திரையுலகில் தனக்கென தனி ரசிகர்களை கொண்ட நடிகர் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் . 1962 ஆம் ஆண்டு பிறந்த இவர் 1981 ஆம் ஆண்டு முதல் நடித்து வருகிறார் .ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிறந்த அர்ஜுன் . தேசப்பற்று மிக்க பல படங்களை நடித்து உள்ளார் . சில படங்களை இயக்கி உள்ள இவர் . நிவேதிதா என்பவரை 1988 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

அர்ஜுன் , நிவேதிதா தம்பதிக்கு ஐஸ்வர்யா , அஞ்சனா என்ற இரு மகள்கள் உள்ளனர் . மூத்த மகள் ஐஸ்வர்யா சில படங்களில் நடித்துவரும் நிலையில் . இளைய மகள் அஞ்சனா பெரிதாக வெளியில் தெரியவில்லை.

ஐஸ்வர்யா அர்ஜூன் இவர் தமிழில் வெளிவந்த பட்டத்து யானை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன் பின்னர் நடிகை ஐஸ்வர்யா Prema Baraha என்ற ஒரு கன்னட திரைப்படத்தில் நடித்துள்ளார், தனது தந்தை அர்ஜுனின் இயக்கத்தில் தமிழில் வெளிவந்த சொல்லிவிடவா படத்திலும் நடித்திருந்தார். சினிமாவில் பெரிதாக சாதிக்க முடியாத ஐஸ்வர்யா இப்போது இல்லற வாழ்க்கையில் நுழைய உள்ளார். தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக காமெடியில் கலக்கி வருபவர் தம்பி ராமையா. இவரின் மூத்த மகன் தம்பி ராமையா.

உமாபதியும் ஐஸ்வர்யாவும் சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில்  விரைவில் அவர்களின் திருமணம் நடக்க உள்ளது. இந்நிலையில் நேற்று அவர்கள் இருவருக்கும் எளிமையான முறையில் இருவீட்டார் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.

இந்நிலையில் திருமணத்துக்கு ஓகே சொல்லியுள்ள தம்பி ராமையா, திருமணத்துக்குப் பிறகு நடிக்கக் கூடாது என ஐஸ்வர்யாவுக்கு கண்டீஷன் போட்டுள்ளாராம். இதற்கு அர்ஜுன் குடும்பத்தாரும் சம்மதித்துள்ளதாக சொல்லப்படுகிறது. 1992 ஆம் ஆண்டு பிறந்த ஐஸ்வர்யாவுக்கு இப்போது 31 வயதாகும் நிலையில் . 1994 ஆம் ஆண்டு பிறந்த உமாபதி தம்பி ராமைய்யாவுக்கு இப்போது தான் 28 வயதாகிறது. இவரைவிட ஐஸ்வர்யா 2.5 ஆண்டுகள் பெரியவர். ஆனால் தம்பி ராமையா இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் திருமணத்திற்கு முழு மனதுடன் அனுமதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.