Saturday, April 18, 2026
Home > Cinema > திறமைக்கு மரியாதை இல்லை அட்ஜஸ்ட்மெண்ட் செய்யணும்… அம்மாவின் நண்பரே அப்படி நடந்துகொண்டார்… நடிகை கல்யாணி பகீர் தகவல்!

திறமைக்கு மரியாதை இல்லை அட்ஜஸ்ட்மெண்ட் செய்யணும்… அம்மாவின் நண்பரே அப்படி நடந்துகொண்டார்… நடிகை கல்யாணி பகீர் தகவல்!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக கலக்குபவர்கள் வளர்ந்த பின்னர் ஜொலிப்பது வெகு அபூர்வம். அப்படி குழந்தை நட்சத்திரமாகக் கலக்கி வளர்ந்த பின்னர் காணாமல் போனவர்தான் நடிகை கல்யாணி.

அள்ளித்தந்த வானம் படத்தில் பிரபுதேவாவோடு இருக்கும் கதாபாத்திரத்தில் அறிமுகமான கல்யாணி, தொடர்ந்து ரமணா மற்றும் ஜெயம் ஆகிய படங்களிலும் நடித்து கவனம் ஈர்த்தார்.

ஆனால் அதன் பிறகு அவர் வேறு படங்களில் பெரிதாக நடிக்கவில்லை. திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆன அவர் பின்னர் நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும், சீரியல் நடிகையாகவும் ஆனார்.

இந்நிலையில் ஏன் வளர்ந்த பின்னர் ஹீரோயினாக நடிக்கவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் “சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்புகள் வந்தன. ஆனால் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்துகொண்டால்தான் ஹீரோயினாக முடியும் என்பதால் நான் ஹீரோயினாக முயற்சி செய்யவில்லை. இங்கு திறமைக்கு மதிப்பே கிடையாது.

என் அம்மாவின் நண்பர் ஒரு இசையமைப்பாளர். அவர் சின்ன வயதில் என்னை அந்தரங்க பாகங்களில் தொடுவார். நான் தூங்கும் போதும் இதை செய்துள்ளார். அம்மா இருக்கும் போது நல்லவராக இருக்கும் அவர் அதன் பின்னர் இந்த விஷயங்களை செய்வார்” என ஆதங்கத்தோடு பதிவு செய்துள்ளார்.