மாயா சுந்தர கிருஷ்ணன் ஒரு இந்திய நடிகை, விளம்பர நடிகை மற்றும் தமிழ் திரையுலகின் பின்னணிப் பாடகர் ஆவார். இவர் கல்லூரி இசைத் திரைப்படமான வானவில் வாழ்க்கை (2015) திரைப்படத்தில் அறிமுகமானார்.

மாயா தமிழ்நாட்டிலுள்ள மதுரையில் பிறந்தார். இவர் மதுரை டிவிஎஸ் லட்சுமி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர் பெங்களூரு அம்ரிதா பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றார்.

அவர் ஒரு குழந்தையாக இருக்கும்போதே சீருடற்பயிற்சி விளையாடினார். மேலும் தேசிய அளவில் சீருடற்பயிற்சியில் ஆறாவது இடத்தில் இருந்தார். அவரது சகோதரி, சுவாதி எஸ். கிருஷ்ணன் தமிழ்த் திரைப்படத் துறையில் ஒரு பாடகர் ஆவார்.

ஜேம்ஸ் வசந்தனின் வானவில் வாழ்க்கையில் அறிமுகமானபோது, மாயா நாடகத்திலிருந்து திரையுலகிற்கு நகர்ந்தார், “டிவாய்ட் ஆப் எக்ஸைட்மென்ட்” மற்றும் மற்றும் “எ வேஸ்டட் எபோர்ட்” என்ற நாடகக்ங்களில் ஒரு பாடகராக நடிப்பதற்கு தனது முடியை வெட்ட வேண்டியிருந்தது. தொடரி படத்தில் பத்திரிகை நிருபராக நடித்தார், மேலும் துருவ நட்சத்திரம், 2.0, மகளிர் மட்டும் மற்றும் சர்வர் சுந்தரம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

பின்னர் அவர் நடித்த விக்ரம் திரைப்படம் அவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது. அந்த திரைப்படத்தில் அவர் ஒரு பாலியல் தொழிலாளியாக நடித்திருந்தார். இந்நிலையில் இப்போது பிக்பாஸ் வீட்டுக்கு சென்றுள்ள அவர் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் அவர் நீச்சலுடையில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
