Sunday, April 19, 2026
Home > Cinema > லோகேஷுக்கு எவ்வளவு வேணாலும் சம்பளம் கொடுக்க தயாராக இருக்கும் படத் தயாரிப்பு நிறுவனம்.. சும்மா இல்ல காரணம் இதுதான்!

லோகேஷுக்கு எவ்வளவு வேணாலும் சம்பளம் கொடுக்க தயாராக இருக்கும் படத் தயாரிப்பு நிறுவனம்.. சும்மா இல்ல காரணம் இதுதான்!

கடந்த 2019ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதோடு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. அதன் பின்னர் அவர் இயக்கிய மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களும் மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்தன.

இதை தொடர்ந்து “கைதி 2” படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது இதனிடையே கைதி படத்தின் சீக்கிரமாக வெளியான “விக்ரம்” படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. விக்ரம் திரைப்படத்தில் கைதி திரைப்படத்தின் சில கதாபாத்திரங்கள் இடம்பெற்று கூடுதல் கவனத்தை ஈர்த்தன.

இப்போது லோகேஷ் விஜய் நடிக்கும் லியோ படத்தை தயாரித்து வரும் நிலையில் அடுத்து அவர் ரஜினி நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை தயாரிக்க பல முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் இந்த பிராஜெக்டை கைப்பற்ற லோகேஷுக்கு சம்பளம் எவ்வளவு வேண்டுமானாலும் தர கேஜிஎஃப் பட நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் துடிக்கறதாம்.