Monday, July 6, 2026
Home > Cinema > ஈகோவை விட்டு தேடிப் போய் வாய்ப்புக் கேட்ட இளையராஜா… அதுவும் மார்க்கெட் உச்சத்தில் இருந்த போது.. ஏன்?

ஈகோவை விட்டு தேடிப் போய் வாய்ப்புக் கேட்ட இளையராஜா… அதுவும் மார்க்கெட் உச்சத்தில் இருந்த போது.. ஏன்?

தமிழ் சினிமாவில் அளப்பரிய சாதனைகள் செய்தவர்கள் இளையராஜாவும் ஒருவர். இதுவரை இந்திய மொழிகளில் 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள அவர் 3 முறை தேசிய விருதைப் பெற்றுள்ளார். திரைப்பட இசை மட்டும் இல்லாமல் சில தனியிசை ஆல்பங்கள் மற்றும் பக்தி பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார். 81 வயதில் இப்போதும் பிஸியான இசையமைப்பாளராக வலம் வருகிறார். சமீபத்தில் அவர் இசையமைத்த விடுதலை திரைப்படம் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

இளையராஜா அன்னக்கிளி திரைப்படம் மூலமாக 1976 ஆம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். ஆனால் அதற்கு முன்பு அவர் யாரிடமும் சென்று தனக்கு வாய்ப்புக் கொடுங்கள் எனக் கேட்டதில்லை. அவருக்காக அவர் சகோதரர்கள்தான் வாய்ப்புக் கேட்பார்களாம்.

ஆனால் 1980 களில் அவர் தனது மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த போது இயக்குனர் கே சங்கர் இயக்கிய போது அவரை தேடி சென்று ‘எனக்கு இந்த படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பைக் கொடுங்கள்’ எனக் கேட்டாராம். அதற்கு காரணம் இளையராஜா தீவிரமான மூகாம்பிகை பக்தர் என்பதுதான் காரணம் என நாம் சொல்லி தெரியவேண்டியதில்லை.