நடிகை கௌதமி இவர் 1969 ஆம் ஆண்டு ஆந்திராவில் பிறந்தவர் . கௌதமியின் தந்தை மற்றும் தாய் இருவருமே மருத்துவர்கள் . அந்த காலகட்டத்தில் இது மிக பெரிய விசயம்.

நல்ல செல்வாக்கு மிகுந்த குடும்ப்ததில் பிறந்த கௌதமி பெங்களூரில் பள்ளி படிப்படியும் . விசாகப்பட்டினத்தில் கல்லூரி படிப்படிபையும் முடித்தார் .

1987 ஆம் ஆண்டு சில தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கினார் கௌதமி. பின்னர் 1988 ஆம் ஆண்டு ரஜினி , பிரபு இணைந்து நடித்த குரு சிஷ்யன் படத்தில் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார்.

கௌதமி தமிழில் அறிமுகமாகும் போது அவருக்கு வயது 19 தான். மிக இளம் வயதில் சினிமாவில் நுழைந்த கௌதமி . விரைவில் உச்ச நடிகையாக மாறினார் தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் என ஆண்டுக்கு 10 படங்களுக்கு மேல் நடித்தார்.


குறிப்பாக 1992 ஆம் ஆண்டு தமிழில் மட்டுமே 12 படங்கள் கௌதமி நடிப்பில் வெல்லியாகி இருந்தது. 10 ஆண்டுகள் கொடிகட்டி பரந்த கௌதமி 1997 ஆம் ஆண்டிற்கு பிறகு பட வாய்ப்புகள் குறையவே.

சந்தீப் பாட்டியா என்ற தொழிலதிபரை 1998 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். கௌதமி சந்தீப் ஜோடிக்கு 1999 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

அடுத்த சில மாதங்களில் இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். கௌதமி மகளின் பெயர் சுப்புலட்சுமி . பின்னர் சில காலம் கௌதமி மற்றும் மகள் சுப்புலட்சுமி தனிமையில் வாழ்ந்து வந்தனர்.


பின்னர் 2004 ஆம் ஆண்டு கௌதமி கமல் ஹாசன் இருவரும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். 2016 ஆம் ஆண்டு வரை கமல் ஹாசன் உடன் சேர்ந்து வாழ்ந்து வந்த கௌதமி . 2016 ஆம் ஆண்டு இருவரும் பிரிவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் தற்போது கௌதமி மற்றும் அவர் மகள் சுப்புலட்சுமி ஆகியோரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது . அந்த புகைப்படங்கள் உங்களுக்காக இந்த பதிவில்.




