தொலைக்காட்சி தொகுப்பாளினியாகவும், மாடல் நடிகையாகவும் இருந்த ஸ்வஸ்திகா கிருஷ்ணனை ரசிகர்களிடம் வெகுவாகப் பிரபலம் ஆக்கியது விக்ரம் திரைப்படம்தான். அந்த படத்தில் கமலின் மருமகளாக காளிதாஸ் ஜெயராமின் மனைவி வேடத்தில் நடித்திருந்தார். படத்தின் முதல் பாதியில் அவருக்கு கமலோடு நிறையக் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

அந்த படத்தின் ஹிட்டால் யார்ரா இந்த பொண்ணு என தேடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரை பின் தொடர ஆரம்பித்தனர். அதையடுத்து அவரும் வரிசையாக சூப்பர் கூல் புகைப்படங்களை பகிர, இணையத்தில் வைரல் ஆனது.

கர்நாடகாவில் 1992 ஆம் ஆண்டு பிறந்த இவர், இப்போது சென்னையில் வசித்து வருகிறார். தொகுப்பாளினியாக பணியாற்றிய இவர் விக்ரம் படத்துக்கு முன்பாக பல குறும்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் ஆகியவற்றில் நடித்திருந்தார்.

எல்லா நடிகைகளைப் போலவும் இவரும் சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் இவர் இப்போது பகிரும் புகைப்படங்கள் ஆயிரக்கணக்கில் லைக்ஸ்களைப் பெற்று வருகின்றன.

அந்த வகையில் இப்போது அவர் க்ரே நிற மாடர்ன் உடையில் கொடுத்துள்ள போஸ்கள் வைரல் ஆகி வருகின்றன.

