Sunday, April 19, 2026
Home > Cinema > வாரிசு படத்தின் கலை இயக்குனர் திடீர் மரணம்… திரையுலகில் சோகம்!

வாரிசு படத்தின் கலை இயக்குனர் திடீர் மரணம்… திரையுலகில் சோகம்!

வாரிசு உள்ளிட்ட ஏராளமான படங்களில் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார் சுனில் பாபு.

விஜய் நடிக்கும் வாரிசு  படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்க, தமன் இசையமைக்கிறார். முதல் முதலாக விஜய் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். தற்போது தமிழ் சினிமாவில் உருவாகி வரும் அதிக பட்ஜெட் கொண்ட படமாக வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படம் வரும் ஜனவரி 11 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இந்த படத்தில் பணியாற்றிய கலை இயக்குனர் சுனில் பாபு மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார்.

கேரளாவின் எர்ணாகுளத்தில் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நள்ளிரவு 11 மணியளவில் இயற்கை எய்தியுள்ளார்