Thursday, May 14, 2026
Home > Cinema > சிபி சக்ரவர்த்தியைக் கழட்டிவிட்ட ரஜினி… அடுத்த பட இயக்குனர் இவரா?

சிபி சக்ரவர்த்தியைக் கழட்டிவிட்ட ரஜினி… அடுத்த பட இயக்குனர் இவரா?

ரஜினிகாந்த் லைகா நிறுவனத்துக்கு அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

அண்ணாத்த படத்தின் தோல்விக்குப் பிறகு ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். பீஸ்ட் படத்தின் தோல்விக்குப் பிறகு இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். நெல்சனின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் இந்த படத்துக்கும் இசையமைக்கிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர்.

வரிசையாக ரஜினி படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. அதுபோல ரஜினியின் சம்பளமும் குறைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.      

இப்போது விறுவிறுப்பாக ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் ரஜினி அடுத்து தன் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அவர் ஒரு சிறப்புத் தோற்றத்தில் மட்டுமே நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் அடுத்து ரஜினி நடிக்கும் படத்தை ‘டான்’ படத்தின் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்குவார் என சொல்லப்பட்டது. ஆனால் சிபி சொன்ன கதை ரஜினிக்கு பிடிக்கவில்லை என்று சொல்லப்பட்டது. இப்போது லவ் டுடே இயக்குனர் பிரதீப் ரஜினிக்காக கதை சொல்ல லைகா நிறுவனத்தை அனுகி வருவதாக சொலல்ப்படுகிறது.