Wednesday, May 6, 2026
Home > Cinema > செம்ம…. கைதி படத்தின் ரீமேக்கில் நடிக்கும் அமலா பால்… எந்த கேரக்டர்-ஆ இருக்கும்?

செம்ம…. கைதி படத்தின் ரீமேக்கில் நடிக்கும் அமலா பால்… எந்த கேரக்டர்-ஆ இருக்கும்?

நடிகை அமலா பாலுக்கு இப்போது தமிழ் சினிமாவில் பெரிதாக எந்த படமும் கையில் இல்லை.

சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் நடிகை அமலா பால் 2010 ஆம் ஆண்டு வெளியான மைனா திரைப்படத்தின் மூலம்தான் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இந்த படத்தில் வித்தார்த்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் விருதினை வென்றார் அமலா பால். பின்னர் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது போன்ற பல விருதுகளை மைனா படத்திற்காக பெற்றார். அதன் பின்னர் முன்னணி நடிகரான விஜய் படத்தில் நடிக்கும் அளவுக்கு வளர்ந்தார்.

2009 ஆம் ஆண்டு நீலதம்ரா  என்ற மலையாள திரைப்படத்தின் மூலம்  திரையுலகில் அறிமுகமானார். மைனா வெற்றிக்குப் பிறகு தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி,விஜய் நடிப்பில் தலைவா போன்ற பல படங்களில் நடித்து வந்தார்.இவர் இயக்குனர் விஜயை திருமணம் செய்து கொண்டார்.பின்னர் விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.

அதன் பின்னர் அமலா பாலுக்கு பெரிதாக வெற்றிப் படங்கள் அமையவில்லை. கடைசியாக 2019 ஆம் ஆண்டு வெளிவந்த ஆடை படத்தில் கதாநாயகியாக நடித்தார். கடந்த வருடம் வெளிவந்த குட்டி ஸ்டோரி ஆந்தாலஜி படத்திலும் நடித்திருந்தார். சமீபத்தில் அதோ அந்த பறவை போல, கடவர் போன்ற சில படங்களில் நடித்திருந்தார்.

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் தொடர்ந்து புகைப்படங்களாக வெளியிட்டு வைரல் ஆக்கி வரும் அமலா பால், இப்போது கைதி படத்தின் இந்தி ரீமேக்கில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறாராம். தமிழில் இடம்பெறாத ஒரு கதாபாத்திரம் இந்தி படத்துக்காக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.