பாகுபலி படங்களின் வெற்றிக்குப் பிறகு பேன் இந்தியா ஹீரோவான பிரபாஸ் அதன் பின்னர் நடித்த சாஹோ மற்றும் ராதே ஷ்யாம் ஆகிய படங்கள் அட்டர் ப்ளாப் ஆகின. ஆனாலும் அவருக்கு இன்னமும் பேன் இந்தியா லெவலில் மார்க்கெட் உள்ளதாக பாலிவுட் இயக்குனர்கள் தொடர்ந்து அவரிடம் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் இப்போது பிரபல பாலிவுட் இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ராமாயணத்தை மையப்படுத்திய கதையான ஆதிபுருஷ் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சைஃப் அலிகான் மற்றும் கிரீத்தி சனோன் ராவணனன் மற்றும் சீதா கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
மோஷன் கேப்ச்சர் தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த திரைப்படம் வரும் ஜனவரி மாதம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் அயோத்தியில் வைத்து ரிலீஸ் செய்யப்பட்டது. டீசர் வெளியானது முதல் கார்ட்டூன் போல இருப்பதாக ட்ரோல்கள் பரவின.
இதனால் பீதியடைந்த படக்குழு, இப்போது கிராபிக்ஸ் காட்சிகளின் தரத்தை உயர்த்த முடிவு செய்துள்ளார்களாம். அதனால் பல காட்சிகளின் கிராபிக்ஸ் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதால் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸ் ஆவதாக இருந்த ஆதிபுருஷ் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகும் என சொல்லப்படுகிறது.

