Sunday, May 3, 2026
Home > Cinema > ரஜினியோடு இணைந்து நடிக்கும் அதர்வா? ஐஸ்வரயா இயக்கும் புதிய படத்தின் அப்டேட்!

ரஜினியோடு இணைந்து நடிக்கும் அதர்வா? ஐஸ்வரயா இயக்கும் புதிய படத்தின் அப்டேட்!

நடிகர் ரஜினிகாந்த் அடுத்து தன்னுடைய மகள் ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடிக்க உள்ளாராம்.

அண்ணாத்த படத்தின் தோல்விக்குப் பிறகு ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். பீஸ்ட் படத்தின் தோல்விக்குப் பிறகு இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். நெல்சனின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் இந்த படத்துக்கும் இசையமைக்கிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது கடலூரில் நடந்து வருகிறது. இந்த படத்தை முடித்துவிட்டு ரஜினிகாந்த் அடுத்து இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இதற்கிடையில் ரஜினிகாந்த், தன்னுடைய மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கும் புதிய படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தில் நடிகர் அதர்வா கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தையும்  லைகா நிறுவனமே தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.