Wednesday, February 25, 2026
Home > Cinema > ஷார்ட்ஸ் டிஷர்ட்டில் கடற்கரையில் ஜாலியாக உலாத்தும் மாளவிகா மோகனன்!

ஷார்ட்ஸ் டிஷர்ட்டில் கடற்கரையில் ஜாலியாக உலாத்தும் மாளவிகா மோகனன்!

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் அதிக ரசிகர்களைக் கொண்ட நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகனன்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை மாளவிகா மோகனன்.பேட்ட படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் புடவை உடுத்திக் கொண்டு குடும்ப பெண்ணாக நடித்திருந்தார் மாளவிகா மோகனன்.

தமிழ் ரசிகர்களுக்கு மத்தியில் அவரை பிரபலமாக்கியது மாஸ்டர் திரைப்படம்தான். அதன் பின்னர் தனுஷுடன் இணைந்து மாறன் படத்தில் நடித்தார். அந்த படத்துக்குப் பிறகு தமிழில் அவருக்குப் பெரியளவில் வாய்ப்புகள் வரவில்லை.

ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் மாளவிகா மோகனன் சமூகவலைதளங்கள் மூலமாக மிகவும் நெருக்கமான தொடர்பில் இருந்து வருக்கிறார். டிவிட்டரில் அடிக்கடி ரசிகர்களோடு உரையாடி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். அதே  ஒருபுறம் இருக்க இவர் பல போட்டோ ஷூட்களை நடத்தி  வருகிறார். அந்த கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர அவை வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் இப்போது அரைக்கால் சட்டை மற்றும் வெள்ளை டீஷர்ட் அணிந்து கடல்கரையில் ரிலாக்ஸ் பண்ணும் தன்னுடைய புகைப்படங்களை மாளவிகா மோகனன் தற்போது வெளியிட அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.