Monday, June 22, 2026
Home > Cinema > பீச்சில் ஜாலியாக ஒரு போட்டோஷூ்ட்… வைரலாகும் அஜித் பட நடிகையின் புகைப்படங்கள்!

பீச்சில் ஜாலியாக ஒரு போட்டோஷூ்ட்… வைரலாகும் அஜித் பட நடிகையின் புகைப்படங்கள்!

நடிகை கனிகா தமிழில் பைவ்ஸ்டார் திரைப்படம் மூலமாக அறிமுகமானார்.

தொடர்ந்து எதிரி உள்ளிட்ட பல படங்களில் நடித்த கனிகாவுக்கு நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியானவரலாறு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் நடிகை கனிகா. இந்த திரைப்படத்தில் அவர் மையக் கதாபாத்திரமாக நடிக்கவில்லை என்றாலும், அவரது கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் கிடைத்தன.

தமிழில் எதிரி, ஆட்டோகிராப், டான்சர், வரலாறு போன்ற பல படங்களில் நடித்துள்ள இவர் பல மலையாள படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். இவர் தமிழ் படங்களை தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நடித்து வந்தார்.

ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து ஒதுங்கிய அவர் இப்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். தமிழில் குரல்,விக்ரம் நடித்த கோப்ரா, விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஒரே யாவரும் கேளீர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.இதை தவிர பாப்பன், இடைரி போன்ற மலையாள படங்களில் நடித்து வருகிறார். தமிழில் எதிர்நீச்சல் என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் கனிகா, தனது கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து பகிர்ந்துள்ளார். அதற்காகவே அவரின் பாலோயர்ஸ் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருகிறது. இந்நிலையில் தற்போது கேரளாவின் கோவளம் பீச்சில் எடுத்த கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளார்.