Thursday, September 11, 2025
Home > Cinema > வாரிசு படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்டால் குஷியான ரசிகர்கள்!

வாரிசு படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்டால் குஷியான ரசிகர்கள்!

விஜய் நடிக்கும் வாரிசு  படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்க, தமன் இசையமைக்கிறார். முதல் முதலாக விஜய் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். தற்போது தமிழ் சினிமாவில் உருவாகி வரும் அதிக பட்ஜெட் கொண்ட படமாக வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படம் தெலுங்கிலும் வார்சாடு என்ற பெயரில் உருவாகி வருகிறது. பொங்கலுக்கு அஜித்தின் துணிவோடு மோதும் வாரிசு படத்தின் இறுதிகட்ட காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. விரைவில் ஐதராபாத்தில் 10 நாட்கள் கிளைமேக்ஸ் காட்சிகளை படமாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே படத்தின் முதல் சிங்கிள் பாடலான ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் வெளியானது. அந்த பாடல் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இப்போது இரண்டாவது சிங்கிள் பாடல் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றது.

டிசம்பர் 4 ஆம் தேதி இந்த பாடல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த பாடலை சிம்பு பாடியுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.