Thursday, May 2, 2024
Home > Cinema > தளபதி 67 ஷூட்டிங் தமிழ்நாட்டுல எடுக்க முடியுமா?… கடைசி நேர மாற்றம்!

தளபதி 67 ஷூட்டிங் தமிழ்நாட்டுல எடுக்க முடியுமா?… கடைசி நேர மாற்றம்!

வாரிசு திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மூனாறு பகுதியில் நடக்கும் என சொல்லப்பட்டது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. அதற்கு முன்பாகவே விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார்.

`

தளபதி 67 படம் டிசம்பர் மாதம் மூனாறில் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் வில்லன்களாக நடிக்க சஞ்சய் தத் மற்றும் இயக்குனர் மிஷ்கின் ஆகியோர் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

```
```

டிசம்பரில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால் அதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இந்த படத்துக்கு சுமார் 170 நாட்கள் ஷுட்டிங் நடந்த லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் தமிழ்நாட்டில் விஜய் படத்தின் ஷூட்டிங்கை நடத்தினால், ரசிகர்கள் கூடி படப்பிடிப்பு பாதிக்கப்படும் என்பதால், இப்போது மும்பை அருகே ஷூட்டிங்கை மாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.