தமிழ் சினிமாவில் தன்னுடைய நடிப்புத் திறமையால் உச்சத்துக்கு சென்று கொண்டிருப்பவர் அந்த நடிகர். அவரின் படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பல பாராட்டுகளை குவித்து வருகின்றன. அவரின் நடிப்புக்காக எவ்வளவு தூரம் பாராட்டப்படுகிறாரோ, அதே அளவுக்கு அவரின் தனிப்பட்ட பழக்கங்களுக்காக விமர்சிக்கவும் படுகிறார்.
திருமணம் ஆகி குழந்தைகள் பிறந்து செட்டில் ஆன அந்த நடிகர், பிற நடிகைகளோடு பழக்கத்தில் இருப்பதை இன்னமும் குறைத்துக் கொள்ளவில்லை. தன் படங்களில் நடிக்கும் நடிகைகளோடு நெருக்கமாக பழகுவதில் வல்லவர் அந்த நடிகர். அதனால் அவரின் குடும்பத்துக்குள்ளேயே ஏகப்பட்ட பிரச்சனைகள்.
இருந்தாலும் அதைப் பற்றி அந்த நடிகர் கவலைப்படாமல் தன் வாழ்க்கையை உல்லாசமாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அந்த நடிகரோடு தொடர்பில் இருந்த நடிகை ஒருவரை தான் ஏற்பாடு செய்திருந்த பார்ட்டி ஒன்றுக்கு நடிகர் அழைக்கவில்லையாம். ஏனென்றால் ஏற்கனவே குழப்பத்தில் இருக்கும் நடிகரின் குடும்ப வாழ்க்கை மேலும் சிக்கலுக்கு உள்ளாகும் என நினைத்துள்ளார்.
ஆனால் தன்னை பார்ட்டிக்கு அழைக்காததால் கோபித்துகொண்ட நடிகை, நடிகரை இதற்காக போன் செய்து கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் மனம் கரைந்த நடிகர், நடிகையை மிகப்பெரிய நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்று தனியாக பார்ட்டி வைத்து செம்மையாக கவனித்துள்ளாராம். இந்த பாரட்டியில் நடிகையின் அம்மாவும் இருந்துள்ளார் என்பது கூடுதல் செய்தி.
இந்த விஷயம் எப்படியோ நடிகரின் குடும்பத்துக்கு தெரிந்துவிட, இப்போது மேலும் புகைச்சல் அதிகமாகியுள்ளதாக கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன.
