Wednesday, May 1, 2024
Home > Cinema > ரசிகர்களை ஏமாற்றியதா பிரின்ஸ் திரைப்படம் ? முதல் நாள் முதல் காட்சி பார்த்த ரசிகர்களின் கருத்து!

ரசிகர்களை ஏமாற்றியதா பிரின்ஸ் திரைப்படம் ? முதல் நாள் முதல் காட்சி பார்த்த ரசிகர்களின் கருத்து!

தொடர்ந்து டாக்டர், டான் ஆகிய திரைப்படங்களின் மூலம் வெற்றியைக் கொடுத்த சிவகார்த்திகேயனின் அடுத்தபடமாக ரிலீஸாகியுள்ளது பிரின்ஸ்.

`

இந்த படத்தின் மூலமாக அவர் முதல் முறையாக தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சத்யராஜ், மரியா, சத்யராஜ் ஆகியோரும் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். பிரின்ஸ் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.

```
```

இன்று காலை 5 மணிக்கு இந்த படம் தமிழ்நாட்டில் ரிலீஸானது. முதல் நாள் முதல் காட்சி பார்க்க சென்ற ரசிகர்களை இந்த படம் முற்றிலும் ஏமாற்றியுள்ளது. சுத்தமாக நகைச்சுவை காட்சிகள் எடுபடவில்லை என்று சொல்லும் ரசிகர்கள் விஜய் டிவியில் மதுரை முத்து செய்யும் நகைச்சுவை காட்சிகள் போல மொக்கையாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

சிவகார்த்திகேயனின் அட்டர் ப்ளாப் படமான மிஸ்டர் லோக்கல் படத்தின் இரண்டாம் பாகம் உள்ளதாகவும் பலரும் கூறியுள்ளனர். ரிலீஸுக்கு முன்பே பிரின்ஸ் படத்தின் 12 நிமிடக் காட்சிகள் சுவாரஸ்யம் குறைவாக இருப்பதாக ட்ரிம் செய்யப்பட்டன. ஆனால் அதற்கும் பலனிள்ளாமல் படம் ஒட்டுமொத்தமாக ரசிகர்களைக் கவரவில்லை என்று ரசிகர்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.