Thursday, May 2, 2024
Home > Cinema > பொன்னியின் செல்வன் ஓடிடி ரிலீஸ்… ஆனால் பாக்குறதுல ஒரு சிக்கல்!

பொன்னியின் செல்வன் ஓடிடி ரிலீஸ்… ஆனால் பாக்குறதுல ஒரு சிக்கல்!

பொன்னியின் செல்வன் திரைப்படம் நவம்பர 4 ஆம் தேதி முதல் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது.

`

கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வெற்றியைப் பெற்றது.  இந்த திரைப்படத்துக்கு கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து படம் பார்த்து சென்றனர்.  இதனால் முதல் 3 நாட்களில் உலகம் முழுவதும் சுமார் 200 கோடி ரூபாய் எட்டிய பொன்னியின் செல்வன், 6 நாட்களில் 300 கோடி ரூபாய் வசூலை எட்டியது. 12 நாட்களில் 400 கோடியும் , இதுவரை 450 கோடி ரூபாய்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

```
```

தீபாவளிக்கு படங்கள் வெளியானாலும் தொடர்ந்து பொன்னியின் செல்வன் கணிசமான திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.  இப்போது தமிழகத்தில் 250க்கும் மேற்பட்ட திரைகளில் பொன்னியின் செல்வன் ஓடிக்கொண்டு இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் தினமும் ஒரு கோடி ரூபாய் வரை வசூலிப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் 4 ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக உள்ளது. ஆனால் படத்தை அமேசான் ப்ரைம் சந்தாதாரர்கள் பணம் கட்டிதான் பார்க்க முடியும். அதன் பின்னர் மேலும் சில நாட்கள் கழித்துதான் படம் பணம் கட்டாமல் பார்க்கும் வசதியுடன் வெளியாகும் என தெரிகிறது. முன்னதாக ப்ரைம் வீடியோ கேஜிஎஃப் 2 படத்தையும் இப்படிதான் முதலில் வாடகைக்கு ஸ்ட்ரீம் செய்தது.