Wednesday, May 1, 2024
Home > Cinema > இண்டஸ்ட்ரி ஹிட் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தின் மாஸ் அப்டேட்!

இண்டஸ்ட்ரி ஹிட் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தின் மாஸ் அப்டேட்!

கடந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வெற்றியைப் பெற்றது.  இந்த திரைப்படத்துக்கு கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து படம் பார்த்து சென்றனர்.  இதனால் முதல் 3 நாட்களில் உலகம் முழுவதும் சுமார் 200 கோடி ரூபாய் எட்டிய பொன்னியின் செல்வன், 6 நாட்களில் 300 கோடி ரூபாய் வசூலை எட்டியது. 12 நாட்களில் 400 கோடியும் , இதுவரை 450 கோடி ரூபாய்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

```
```
`

இதையடுத்து பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டாம் பாகம் முதல் பாகத்தின் வசூல் சாதனையை முறியடிக்கும் விதமாக உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து தொடர் ப்ரமோஷன்கள் நடக்க உள்ளதாகவும், மார்ச் 1 ஆம் தேதி டிரைலர் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.