Thursday, November 27, 2025
Home > Cinema > துணிவு படத்தில் பாடல் எழுதிருக்கேன்… அப்டேட் கொடுத்த பாடல் ஆசிரியர்!

துணிவு படத்தில் பாடல் எழுதிருக்கேன்… அப்டேட் கொடுத்த பாடல் ஆசிரியர்!

மூன்றாவது முறையாக அஜித் ஹெச் வினோத் கூட்டணி துணிவு படத்தில் இணைந்துள்ளனர். நடிகர் அஜித் தனது 61 ஆவது படமான துணிவு படத்தில் இப்போது கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தை ஹெச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். பல கட்டங்களாக நடந்து வரும் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன் மற்றும் பிக்பாஸ் ஆமீர் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ள நிலையில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. துணிவு படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி வெளியிடுகிறது.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இதையடுத்து இந்தியா தவிர்த்த ஒட்டுமொத்த வெளிநாட்டு ரிலீஸ் உரிமையையும் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்க லைகா நிறுவனம் ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் படத்தில் இருந்து பாடல்கள் எப்போது ரிலீஸ் ஆகும் என அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். துணிவு படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும்  நிலையில், அதில் ஒரு பாடலை பாடல் ஆசிரியர் விவேகா எழுதியுள்ளாராம். இதை சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவரே வெளிப்படுத்தியுள்ளார்.