Sunday, May 12, 2024
Home > Cinema > லோகேஷின் முதல் ப்ளாப் படமா லியோ… டிவிட்டரில் பொங்கல் வைக்கும் ரசிகர்கள்!

லோகேஷின் முதல் ப்ளாப் படமா லியோ… டிவிட்டரில் பொங்கல் வைக்கும் ரசிகர்கள்!

விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் இன்று ரிலீஸாகியுள்ளது. தமிழகத்தில் காலை 9 மணிக்குக் காட்சிகள் தொடங்கிய நிலையில் அண்டை மாநிலங்களில் அதிகாலைக் காட்சிகள் ரிலீஸாகி ஒரு ஷோ முடிந்துள்ளது. தமிழ்நாட்டு ரசிகர்கள் அண்டை மாநிலங்களுக்கு படையெடுத்து படத்தைப் பார்த்து சமூகவலைதளங்களில் தங்கள் விமர்சனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்போது தமிழகத்தில் முதல் காட்சிகள் முடிந்துள்ள நிலையில் கலவையான விமர்சனங்கள் வர தொடங்கியுள்ளன. படத்தை பார்த்த விஜய் ரசிகர்கள் ஆஹா ஓஹோ என சொல்லி வந்தாலும், டிவிட்டரில் பொதுவான ரசிகர்கள் படத்தை கழுவி ஊற்றி வருகின்றனர்.

`

பலரும் இந்த படம் லோகேஷ் இயக்கியது போலவே இல்லை என்றும், அவரின் இணை இயக்குனர் ரத்னகுமார் இயக்கியது போல உள்ளதாகவும் கூறிவருகின்றனர். முன்னர் விஜய்க்கும் லோகேஷ்க்கும் இடையே சண்டை எனப் பரவிய தகவல் உண்மைதான் போல எனக் கூறியுள்ளனர்.

```
```

படத்தின் முதல் சில காட்சிகளை விட எதுவுமே ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை என்று ஒரு சாரார் புலம்பி வருகின்றனர். விஜய்யின் தோல்விப் படமான பீஸ்ட் படமே இதற்கு பரவாயில்லை என ரசிகர்கள் கூற,  இன்னும் சிலரோ இது லோகேஷின் முதல் ப்ளாப் படமாக அமைந்துள்ளது என கூற ஆரம்பித்துள்ளனர்.

இதுவரை மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என நான்கு படங்களை இயக்கியுள்ள லோகேஷ் நான்கையுமே சூப்பர் ஹிட்டாகக் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.