2019ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதோடு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.இதை தொடர்ந்து “கைதி 2” படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது
இதற்கிடையே கைதி திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தில் கார்த்தி வேடத்தில் நடிப்பதோடு படத்தை இயக்கவும் செய்கிறார் அஜய் தேவ்கான். கைதி படத்தின் இந்தி ரீமேக்கில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறாராம். தமிழில் இடம்பெறாத ஒரு கதாபாத்திரம் இந்தி படத்துக்காக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதைப் பார்த்த தமிழ்சினிமா ரசிகர்கள் தமிழ்ப் படத்தோடு ஒப்பிட்டு அந்த போஸ்டரை கழுவி ஊற்றி வருகின்றனர்.
