ரவி, அவர் அண்ணன் இயக்கிய ஜெயம் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றியால் அவரது திரைப் பெயர் ஜெயம் ரவி என்று ஆனது. அதன் பின்னர் அடுத்தடுத்து பல ஹிட் படங்களைக் கொடுத்து ஜெயம் ரவி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கிறார்.
திரைப்பட எடிட்டர் ஏ. மோகனின் இரண்டாவது மகனான ரவி, தனது தந்தை தயாரித்த பாவா பவமரிடி (1993) என்ற தெலுங்குத் திரைப்படத்தில் குழந்தை நடிகராக அறிமுகமானார். அதற்காக தமிழ்நாடு மாநில திரைப்பட விருது மற்றும் ஒரு தென்னிந்திய பிலிம்பேர் விருது பெற்றுள்ளார். பள்ளிப் படிக்கும் போதே பரதநாட்டிய நடனக் கலைஞர் நளினி பாலகிருஷ்ணனிடம் நடனம் பயின்ற இவர், தனது 12வது வயதில் அரங்கேற்றம் செய்தார்.
சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் பட்டப்படிப்பை முடித்த பிறகு, திரைப்படத்துறையில் இறங்க முடிவு செய்தார். அதன் பின்னர் கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் திரைப்படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றினார்.
கதாநாயகனாக அறிமுகமான திரைப்படமான ஜெயம் வெற்றி படமாக அமைந்தது. மேலும் M. குமரன் S/O மகாலட்சுமி (2004), உனக்கும் எனக்கும் (2006), சந்தோஷ் சுப்ரமணியம், தனி ஒருவன், பேராண்மை, டிக் டிக் டி, மிருதன் உள்ளிட்ட பல ஹிட் படங்களைக் கொடுத்து இன்று முன்னணி நடிகராக இருக்கிறார்.
அவர் தன்னுடைய கல்லூரித் தோழி ஆர்த்தியைக் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு ஆண்குழந்தைகள் உள்ளனர். தமிழ் சினிமாவில் மகிழ்ச்சியாக இருந்த நட்சத்திர தம்பதிகளில் இவர்களும் ஒருவராக கருதப்பட்டனர். இந்நிலையில் யார் கண் பட்டதோ இவர்கள் விரைவில் விவாகரத்து செய்ய உள்ளதாக சினிமா பத்திரிக்கையாளர் பிஸ்மி மறைமுகமாக தன்னுடைய வீடியோ ஒன்றில் கூறியுள்ளார். இதே கருத்தை இன்னொரு சினிமா பத்திரிக்கையாளரும் தெரிவித்துள்ளார்
இந்நிலையில் இந்த தகவலை உறுதிப்படுத்துவது போல ஆர்த்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து கணவர் ரவி மற்றும் குழந்தைகளோடு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை எல்லாம் நீக்கியுள்ளார். இந்நிலையில் ஜெயம் ரவி ஆர்த்தி ஆகிய இருவரும் கடந்த சில நாட்களாக தனித்தனி வீடுகளில் வசித்து வரும் நிலையில் தற்போது ஜெயம் ரவி, ஆர்த்திக்கு விவாகரத்துக் கோரி வக்கீல் நோட்டீஸே அனுப்பிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் இனிமேல் அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ வாய்ப்பே இல்லை என்று சொல்லப்படுகிறது.