மாயா சுந்தர கிருஷ்ணன் ஒரு இந்திய நடிகை, விளம்பர நடிகை மற்றும் தமிழ் திரையுலகின் பின்னணிப் பாடகர் ஆவார். இவர் கல்லூரி இசைத் திரைப்படமான வானவில் வாழ்க்கை (2015) திரைப்படத்தில் அறிமுகமானார். மாயா தமிழ்நாட்டிலுள்ள மதுரையில் பிறந்தார். இவர் மதுரை டிவிஎஸ் லட்சுமி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர் பெங்களூரு அம்ரிதா பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றார்.
ஜேம்ஸ் வசந்தனின் வானவில் வாழ்க்கையில் அறிமுகமானபோது, மாயா நாடகத்திலிருந்து திரையுலகிற்கு நகர்ந்தார், “டிவாய்ட் ஆப் எக்ஸைட்மென்ட்” மற்றும் மற்றும் “எ வேஸ்டட் எபோர்ட்” என்ற நாடகக்ங்களில் ஒரு பாடகராக நடிப்பதற்கு தனது முடியை வெட்ட வேண்டியிருந்தது. தொடரி படத்தில் பத்திரிகை நிருபராக நடித்தார், மேலும் துருவ நட்சத்திரம், 2.0, மகளிர் மட்டும் மற்றும் சர்வர் சுந்தரம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் விக்ரம் மற்றும் லியோ ஆகிய படங்களில் அவரின் கதாபாத்திரம் கவனம் ஈர்த்தது. தற்போது பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக இருக்கும் அவரை பற்றி பிரபல மாடல் அனன்யா ராம்பிரசாத் சில ஆண்டுகளுக்கு முன்னர் தன்னை பாலியல் ரீதியாக புகார் கூறியது இப்போது வைரல் ஆகிவருகிறது. மாயா ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என பிரபல பாடகி சுசித்ரா தொடர்ந்து அவர் மேல் தாக்குதல் தொடுத்து வருகிறார்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் மாயாவுக்கு ரசிகர்களை விட விமர்சகர்கள்தான் அதிகம். ஆனாலும் தொடர்ந்து மாயா பிக்பாஸ் வீட்டுக்குள் நீடித்து வருகிறார். அவர் செய்யும் சில சேட்டைகளை கமல்ஹாசன் கண்டுகொள்வதே இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் கமலும் மாயாவும் ஒருவேளை உறவினர்களாக இருப்பார்களோ? அதனால்தான் கமல் அவரை காப்பாற்றி வருகிறாரோ? என்றும் கேள்விகள் எழுந்துள்ளன. இது பற்றி மூத்த சினிமா பத்திரிக்கையாளர் சித்ரா லட்சுமணனிடம் ஒரு ரசிகர் கேள்வி எழுப்பியிருந்தார். அவருக்கு பதிலளித்துள்ள சித்ரா லட்சுமணன் “கமலுக்கு மாயா உறவினர் இல்லை. அப்படியே உறவினராக இருந்தாலும் கமல் அவர் தவறு செய்யும் போது தட்டிக் கேட்காமல் இருக்கமாட்டார். கமலின் குணாம்சம் எனக்கு நன்றாக தெரியும்” எனக் கூறியுள்ளார்.
