Tuesday, April 30, 2024
Home > Cinema > இந்தியாவை விட்டு வெளியேறி வெளிநாட்டில் செட்டில் ஆகப்போகிறாரா அஜித்?

இந்தியாவை விட்டு வெளியேறி வெளிநாட்டில் செட்டில் ஆகப்போகிறாரா அஜித்?

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். தற்போது துணிவு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் அஜித் தனது 61 ஆவது படமான துணிவு படத்தில் இப்போது கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தை ஹெச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். பல கட்டங்களாக நடந்து வரும் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

`

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடைய ரசிகர் மன்றங்களைக் கலைத்த அஜித், அதன் பிறகு ஊடகங்களை சந்திப்பதையும் நிறுத்தினார் . தனக்கென்ற ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே வாழ்ந்து வருகின்றார். அவருக்கும் ரசிகர்களுக்கும் இடையே உள்ள ஒரே தொடர்பாக அவரின் படங்கள் மட்டுமே அமைந்துள்ளன.

```
```

இதற்கிடையில் சினிமாவைத் தவிர துப்பாக்கி சுடுதல், பைக் பயணம் என வேறு சில துறைகளிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார். அப்படி சமீபத்தில் ஐரோப்பா கண்டத்தில் உள்ள சில நாடுகளுக்கு பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இந்நிலையில் இன்னும் சில ஆண்டுகளில் நடிகர் அஜித் இந்தியாவை விட்டே சென்று, இங்கிலாந்தின் லண்டன் நகரில் செட்டில் ஆகும் முடிவில் உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. அதுபோல விரைவிலேயே அவர் சினிமாவில் நடிப்பதையும் நிறுத்தி விடுவார் என்று சொல்லப்படுகிறது.