Monday, October 13, 2025
Home > Cinema > தொழிலதிபரை மணக்கும் ஹன்சிகா… மாப்பிள்ளை இவர்தான்

தொழிலதிபரை மணக்கும் ஹன்சிகா… மாப்பிள்ளை இவர்தான்

பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஹன்சிகா. அதன் பின்னர் வளர்ந்து அவர் தெலுங்கு சினிமாவில் பிரபலமான அவர், அடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை ஹன்சிகா.

2007 ஆண்டு “தேசமுதுரு” என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஹீரோயினாக  அறிமுகமானார்.தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான “மாப்பிள்ளை” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.தமிழில் மட்டும் இல்லாமால் தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து முக்கிய முண்ணனி நடிகையாக வளம் வந்தார். குஷ்பு போல பூசிய உடல்வாகோடு இருந்ததால் சின்ன குஷ்பு எனவும் ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.

பெரும்பாலும் நடிகைகள் ஒரு குறிப்பிட்ட வயது வரை மட்டும் தான் திரைப்படங்களில் ஹீரோயினாக முடியும்.அதற்கு மேல் சினிமாவில் அவர்களை கண்டுகொள்ள மாட்டார்கள். நடிகர்கள் ஒரு லெவலுக்கு செல்வது போல நடிகைகள் இருப்பதில்லை. குறிப்பாக சில நடிகைகள் ஒருசில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போகிறார்கள்.இந்த மாதிரி பல நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம்.

தற்போது அவர் கைவசம் தமிழ் உள்பட எந்த மொழிகளிலும் பெரிதாக படங்கள் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர் சிம்புவுடன் காதல் என பல்வேறு கிசு கிசு போய் கொண்டிருந்தது.

இந்நிலையில் இப்போது ஹன்சிகா திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆக உள்ளதாக சொல்லப்படுகிறது. ஜெய்ப்பூரில் ஒரு பிரம்மாண்ட அரண்மனையில் இவரின் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரை மணந்துகொள்ள போகும் மணமகன் ஒரு தொழிலதிபர் என்று சொல்லப்படுகிறது.

இப்போது மணமகன் யார் என்பதைத் தெரியவந்துள்ளது. தொழிலதிபரும் ஹன்சிகாவின் நீண்ட நாள் நண்பருமான சோஹைல் கதூரி என்பவரை டிசம்பர் 4 ஆம் தேதி ஹன்சிகா திருமணம் செய்துகொள்ள உள்ளாராம்.