ஆண்ட்ரியா நடித்துள்ள அனல் மேலே பனித்துளி திரைப்படம் நவம்பர் 18 ஆம் தேதி சோனி லிவ் ஓடிடியில் வெளியாக உள்ளது.
தமிழ் சினிமாவில் பன்முகத் திறமை கொண்ட நடிகைகளில் அரிதானவர் ஆண்ட்ரியா. நடிப்பு தவிர, பாடல் மற்றும் இசை என பல களங்களில் செயல்பட்டு வருகிறார். 1985 ஆம் ஆண்டு பிறந்த ஆண்ட்ரியா . தமிழில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தை ஒரு காட்சியில் மட்டும் நடித்திருந்தார் . அதன் பின்னர் 2007 ஆம் ஆண்டு பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடித்த ஆண்ட்ரியா அந்த படம் மூலமாக பிரபல நடிகையானார்.
இதன் பின்னர் செல்வராகவன் இயக்கத்தில் உருவான் ஆயிரத்தில் ஒருவன் திரைபடத்தில் நடித்ததன் மூலம் தனக்கென தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடித்தார் . தொடர்ந்து பல தமிழ் மட்டும் மலையாள திரைப்படங்களில் நடித்துவரும் ஆண்ட்ரியா. தொடர்ந்து 15 ஆண்டுகளாக நடித்து வரும் ஆண்ட்ரியா தற்போது முக்கிய வேடத்தில் நடித்துள்ள பிசாசு 2 மற்றும் அனல் மேலே பனித்துளி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இதில் அனல் மேலே பனித்துளி திரைப்படம் நவம்பர் 18 ஆம் தேதி சோனி லிவ் ஓடிடியில் வெளியாகிறது. இந்த படத்தில் பாலியல் வல்லுறவுக்கு ஆளான பெண்ணாக ஆண்ட்ரியா நடித்துள்ளார். படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. குறிப்பாக டிரைலரில் இடம்பெற்றிருந்த “மானம் என்பது என்னுடைய உடலிலோ நான் அணியும் ஆடையிலோ இல்லை, நான் வாழும் வாழ்க்கையில்தான் இருக்கிறது” என்ற வசனம் கவனம் ஈர்த்தது.
ஆனால் இதற்கும் மோசமாக கம்னெட்களை சிலர் அள்ளி வீசினர். அதில் ஒருவர் ஆண்ட்ரியாவின் தனிப்பட்ட வாழ்க்கையைக் குறிப்பிட்டு “நீயெல்லாம் மானத்தைப் பற்றி பேசலாமா?” எனக் கேட்டிருந்தார். அதற்கு ஒரு நேர்காணலில் பதிலளித்துள்ள ஆண்ட்ரியா “இவர்களை எல்லாம் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது. இவர்களுக்காகதான் இந்த படத்தை எடுத்துள்ளோம்” எனக் கூறியுள்ளார்.