Wednesday, March 25, 2026
Home > Cinema > மூச்சுமுட்ட வைக்கும் அழகு… டைட் டிரஸ்ஸில் ஹாயாக செல்பி எடுத்து பகிர்ந்த ரித்திகா!

மூச்சுமுட்ட வைக்கும் அழகு… டைட் டிரஸ்ஸில் ஹாயாக செல்பி எடுத்து பகிர்ந்த ரித்திகா!

நடிகை ரித்திகா வெளியிட்டு வரும் புகைப்படங்கள் இணையத்தில் எப்போதும் கூடுதல் கவனத்தை பெற்று வருகின்றன.

தமிழ் சினிமாவில் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை ரித்திகா சிங்.இந்த திரைப்படம் குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

ரித்திகா சிங் நிஜத்தில் குத்துசண்டை வீராங்கனை ஆவார்.இவர் தனது முதல் படத்திலேயே மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

ஹிந்தியில் 2002 ஆம் ஆண்டு வெளியான டார்ஸான் கி பேட்டி  என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.இவர் 2009 ஆண்டு ஆசிய உள்ளரங்கு போட்டிகளிலும் மற்றும் 52 கிலோ எடை பிரிவில் குத்துச்சண்டை வீராங்கனையாக அறிமுகமானார்.பின்னர்இவர் சூப்பர் ஃபையிட் லீகில் போட்டியில் பங்கேற்றுள்ளார்.

பின்னர் 2013 ஆம் ஆண்டு இவர் நடித்த சூப்பர் சண்டை லீக்கிற்கான ஒரு விளம்பரத்தை பார்த்து இயக்குனர் கொங்கரா இவரை இறுதிச்சுற்று படத்தில் நடிக்க வைத்தார்.இவரின் நடிப்பிற்காக 63 வது தேசிய திரைப்பட விருதுகளில் இவரது பெயர் இடம்பெற்றது. பின்னர் இவர் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா  போன்ற சில படங்களில் நடித்தார்.பின்னர் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ஓ மை கடவுளே படத்தில் நடித்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இதையடுத்து சமூகவலைதளங்களில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் வைரல் ஆகி வருகின்றன.