Monday, May 20, 2024
Home > Cinema > போஸ் எல்லாம் சிறப்புதான்… ஆனா நடிப்பு?… இயக்குனரை அப்செட் ஆக்கிய மாளவிகா!

போஸ் எல்லாம் சிறப்புதான்… ஆனா நடிப்பு?… இயக்குனரை அப்செட் ஆக்கிய மாளவிகா!

தமிழ் ரசிகர்கள் மத்தியில் மாளவிகா மோகனனைப் பிரபலமாக்கியது மாஸ்டர் திரைப்படம்தான். அதன் பின்னர் தனுஷுடன் இணைந்து மாறன் படத்தில் நடித்தார். அந்த படத்துக்குப் பிறகு தமிழில் அவருக்குப் பெரியளவில் வாய்ப்புகள் வரவில்லை.

ஆனால் அதற்கு முன்பாகவே அவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.பேட்ட படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் புடவை உடுத்திக் கொண்டு குடும்ப பெண்ணாக நடித்திருந்தார் மாளவிகா மோகனன்.

`

மேலும் பாலிவுட்டில் ஈரானிய இயக்குனர் இயக்கிய பியாண்ட் த க்ளவுட்ஸ் படத்தில் நடித்து இந்திய அளவிலும் கவனத்தை ஈர்த்தவர்.மாளவிகா சினிமாவில் எந்த அளவுக்கு புகழ் பெற்றாஎரோ அதே அளவுக்கு சமூகவலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் புகழைப் பெற்றவர்.

```
```

 பல போட்டோ ஷூட்களை நடத்தி  வருகிறார். அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர அவை வைரலாகி வருகின்றன. லட்சக் கணக்கில் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் பா ரஞ்சித் இயக்கத்தில் அவர் தங்கலான் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஆனால் ஷூட்டிங்கில் மாளவிகாவின் நடிப்பை பார்த்து இயக்குனர் பா ரஞ்சித் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அதிரடியாக அவர் படத்தில் இருந்து நீக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.