சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சுந்தரி. திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் கேப்ரியல்லா நாயகியாக நடித்து வருகிறார்.
அவரை மணக்கும் கணவர், அவரின் கருப்பு நிறத்தால் அவரை ஏற்க மறுத்து வேறு ஒரு பெண்ணை மணந்து கொண்டு இரட்டை வாழ்க்கை வாழ்கிறார். இதை தெரிந்து கொண்டும் அதை வெளியே சொல்ல முடியாமல் சுந்தரி தனது கனவான கலெக்டர் ஆவதற்காக போராடி வருகிறார்.

இந்த எளியக் கதையை வைத்துக்கொண்டே கிட்டத்தட்ட 500 எபிசோட்கள் வரை இழுத்துள்ளனர் இந்த சீரியல் குழுவினர். இந்நிலையில் இப்போது இந்த சீரியலில் பிரபல நடிகை கௌசல்யா ஒரு சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். இது சம்மந்தமான ப்ரோமோ நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
கௌசல்யா 90 களில் தமிழ் சினிமாவில் பிரபல கதாநாயகியாக இருந்தவர். இப்போதும் சில படங்களில் அவர் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
