Monday, May 20, 2024
Home > Cinema > சீக்கிரம் தமிழ் சினிமாவுக்கு வாங்க…. கிறங்கடிக்கும் ஸ்ரீதேவி மகளின் புகைப்படங்கள்!

சீக்கிரம் தமிழ் சினிமாவுக்கு வாங்க…. கிறங்கடிக்கும் ஸ்ரீதேவி மகளின் புகைப்படங்கள்!

நடிகை ஜான்வி கபூர் பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகிறார்.இவர் 1997 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவர் தயாரிப்பாளர் போனி கபூருக்கும் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கும் மகளாக பிறந்தார்‌. தனது தாயைப் போலவே இவரும் நடிப்பில் ஆர்வமாக இருந்ததால் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார்.

இவர் 2018 ஆம் ஆண்டு தடக் என்ற ரீமேக் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார்.இந்த திரைப்படம் ‌மராத்திய சினிமாவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த சாய்ராட் படத்தின் ரீமேக்.இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஜீ சினி விருதினை வென்றார் ஜான்வி கபூர்.இவர் தனது அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார் தற்போது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகிறார்.

`

இவர் நெட் ஃபிளிக்ஸில் என்ற ஓடிடி தளம் தயாரித்த கோஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.தொடர்ந்து கார்கில் கேள், ரோகி போன்ற படங்களில் நடித்திருந்தார்.இந்த திரைப்படங்கள் வணிக ரீதியாகவும் மற்றும் விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றது.

இந்த படங்கள் இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் மற்றும் இன்ஸ்டாகிராமில் இவரை பின் தொடர்ந்து வருகிறார்கள். இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகைகளி ஜான்வியும் ஒருவர். இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்கள் லட்சக்கணக்கில் லைக்குகளைக் குவித்து வருகின்றன.

```
```

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ‘இவர் எப்ப தமிழ் சினிமாவில் நடிக்கப் போகிறார்’ என்ற ஏக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.