தமிழ் சினிமாவில் ஆண் கதாநாயகர்களாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் கோலோச்சினாலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகைகளுக்கு கதாநாயகிகளாக பெரிய வாய்ப்புக் கிடைப்பதில்லை. இப்போது வரை இந்த நிலை நீடித்தாலும், ஒருசிலர் விதிவிளக்காக இருந்து வருகின்றனர். அப்படி ஒருவர்தான் திவ்யா துரைசாமி.

அந்த பிரபலத்தைப் பயன்படுத்தி சினிமாவில் நுழைந்த திவ்யாவுக்கு முதலில் ஹீரோயின் வேடங்கள் கிடைக்கவில்லை. சிறுசிறு வேடங்களில் திரைப்படங்களில் தலைகாட்டிய இவரை சுசீந்தரன் கதாநாயகியாக்கினார். நடிகர் ஜெய்யுடன் குற்றம் குற்றமே படத்தில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்துள்ளார். இப்போது மேலும் சில படங்களில் நடிக்க, இவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழ்நாட்டின் பெரம்பலூரைச் சேர்ந்தவரான திவ்யா துரைசாமி பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானார். செய்தி வாசிபபாளராக இருந்தபோதே பார்வையாளர்களைக் கவர்ந்தவர். இதையடுத்து அவருக்கு சமூகவலைதளங்களில் ரசிகர்கள் உருவாகினர்.


படங்களில் நடிப்பது ஒருபுறம் இருந்தாலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வருவதன் மூலம் ரசிகர்களோடு தொடர்பில் இருந்து வருகிறார். அந்த வகையில் அவர் பகிரும் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன.


வழக்கமாக புடவை அல்லது டிரடிஷனலான உடைகளை அணிந்து பதிவிட்டு வரும் அவர் இப்போது மாடர்ன் ரூட்டுக்கு மாறியுள்ளார். அந்த வகையில் மினிஸ்கர்ட் உடையணிந்து பீச்சில் விளையாடும் ஜாலியான போட்டோக்களைப் பகிர, அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


இந்நிலையில் இப்போது சேலையணிந்து இடையழகை இலைமறை காய்மறையாக காட்டியும் காட்டாமல் சுண்டியிழுக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
Dhivya Duraisamy Photos


Unseen Beach photos of Dhivya Duraisamy

