தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா, அதன் பின்னர் வளர்ந்து கதாநாயகியாக என் ராசாவின் மனசிலே படத்தின் மூலமாக அறிமுகமானார். அந்த படத்தில் அவரின் நடிப்பு அனைவரையும் கவர்ந்ததை அடுத்து, கமல்ஹாசனின் தேவர் மகன் படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

ஆனால் அப்போது மீனா மிகவும் சிறிய பெண்ணாக இருந்ததால் அந்த கதாபாத்திரம் பின்னர் ரேவதிக்கு போனது. ஆனாலும் அடுத்தடுத்து வெற்றிப் படங்கள் கொடுத்த மீனா ரஜினியோடு முத்து, வீரா மற்றும் எஜமான் ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் டாப் நடிகையானார். அதன் பிறகு கமல்ஹாசனோடு இணைந்து அவ்வை சண்முகி படத்தில் நடித்தார்.


ரஜினி கமலை அடுத்து கார்த்தி, அஜித் மற்றும் பிரபு, சத்யராஜ் போன்ற அடுத்த கட்ட நடிகர்களோடும் நடித்த மீனா 90 களில் தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் நடிகையானார். ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொண்ட செட்டில் ஆன பின்னர் சினிமாவை விட்டு விலகினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு திருஷ்யம் படம் அவருக்கு ரி எண்ட்ரியாக அமைந்தது.

அதன் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த மீனாவுக்கு குடும்ப வாழ்க்கையில் ஒரு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்பட்டது. அவரின் கணவர் வித்யாசாகர் உடல்நலக் குறைவு காரணமாக காலாமானார். அந்த சோகத்தில் மீண்டு இப்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.


மீனாவின் ஒரே மகள் நைனிகாவும் இப்போது சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் 90 களில் பீக்கில் இருந்த போது அதிகமாக கவர்ச்சி காட்டாத மீனா, பிகினி உடையில் நீச்சல் குளத்தில் ஆட்டம்போடும் வீடியோ ஒன்று இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
