கடந்த 2017 ஆம் ஆண்டு கூவத்தூரில் உள்ள ஒரு ரெசார்ட்டில் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தங்கவைக்கப் பட்டனர். அவர்கள் அணி மாறிவிடக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக அப்போதே ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. மேலும் எம் எல் ஏ க்கள் நீச்சல் குளத்தில் நீந்தி விளையாடும் வீடியோக்களும் வெளியாகின.
இந்நிலையில் இந்த சம்பவம் சம்மந்தமாக அதிமுக முன்னாள் உறுப்பினரான சேலத்தைச் சேர்ந்த ஏ வி ராஜு ‘கூவத்தூரில் வெங்கடாசலம் எல்லாம் எனக்கு த்ரிஷாதான் வேண்டும் எனக் கேட்டு அடம்பிடித்தார். அவர் சரக்கு எல்லாம் அடிக்க மாட்டார். நல்ல மனிதர். ஆனா திரிஷாதான் வேண்டும் என அடம்பிடித்தார். 25 லட்சம் கொடுத்து அவருக்கு திரிஷாவை அழைத்து வந்து கொடுத்தது நடிகர் கருணாஸ்தான்” என ஓப்பனாக பேசி சர்ச்சையைக் கிளப்பிவிட்டார்.
இதையடுத்து ஏ வி ராஜுவுக்கு கண்டனங்களும் திரிஷாவுக்கு ஆதரவும் கிடைத்தன. இந்த விஷயத்தால் கடுப்பான த்ரிஷா “இதை சட்டப்படி எதிர்கொள்வேன்” எனக் கூறியிருந்தார். இந்நிலையில் சர்ச்சையில் சிக்கிக் கொண்டோம் என உணர்ந்த ராஜு உடனடியாக ஒரு மன்னிப்பு வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதில் “எந்த நடிகையையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. நடிகைகளை போன்ற பெண்கள் வேண்டுமென கேட்டார் எனதான் சொன்னேன். என் பேச்சு திரித்து வெளியிடப்பட்டுள்ளது. இருந்தும் நான் பேசியதால் மனம் புண்பட்டு இருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்டுள்ள நடிகரும் முன்னாள் எம் எல் ஏ வுமான கருணாஸ் ஏ வி ராஜு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் “நான் நடிகராகவும், முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் நிறுவனராகவும் செயல்பட்டு வருகிறேன். மேலும் நடிகர் சங்கத்தில் துணைத் தலைவராகவும் இருந்து வருகிறேன். இந்தச் சூழ்நிலையில் 19.02.2024 ஏ.வி. ராஜன் என்பவர் தனியார் பத்திரிக்கை பேட்டியில் பல்வேறு பொய்யான தகவலையும், சங்கதிகளையும் என் மீது வன்மம் கொண்டு அவதூறாகவும் அருவருப்பான மற்றும் உண்மைக்கு மாறான செய்தியை பரப்பியுள்ளார்.
மேலும், அதில் நடிகை திரிஷாவையும் தொடர்புபடுத்தி, உண்மைக்கு மாறாக பொய்யான செய்தியை விளம்பரத்துக்காக பேட்டி கொடுத்துள்ளார். அதில் இமி அளவு உண்மை இல்லாத பொழுதும் அந்த வீடியோ பல்வேறு தரப்பினரால் பகிரப்பட்டு தற்பொழுது வைரல் ஆகி உள்ளது. அதனைத் தொடர்ந்து பல யூடியூப் சேனலிலும், என்னை பற்றியும், திரிஷாவைப் பற்றியும் பல்வேறு உண்மைக்கு மாறான பொய்யான அவதூறு கருத்துகளை பரப்பி வருகின்றனர்
எந்த ஆதாரம் இன்றி கொடுத்த பொய்யான பேட்டியால் என் பெயருக்கும் மற்றும் புகழுக்கும் சமுதாயத்தில் களங்கம் ஏற்படுத்தி உள்ளனர். மேற்படி உண்மைக்கு மாறான பேட்டியின் காரணமாக நான் மிகுந்த மன உளச்சலுக்கு உள்ளாகி உள்ளேன். எனவே, சம்பந்தப்பட்ட நபர் மீதும், யூடியூப் சேனல்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுத்து, வீடியோ பதிவினை நீக்க உத்தரவு பிறப்பிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
