தொலைக்காட்சி வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி. தொடர்ந்து 7 சீசன்களாக நடந்து வரும் பிக்பாஸ் இந்த சீசனில் அவ்வளவாக சூடுபிடிக்கவில்லை. அதனால் செயற்கையாகவே பல பரபரப்புகளை உருவாக்கி வருகின்றனர்.
ஆரம்பத்தில் பவா செல்லத்துரையை அனைவரும் டார்கெட் செய்து வெளியேற்றியது, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி பிரதீப் ஆண்டனியை வெளியேறியது என சர்ச்சைகள் காரணமாக பிக்பாஸ் கவனம் பெற்று வருகிறது.
ஆனால் ப்ரதிப் வெளியேற்றப்பட்ட பின்னர் ஜோவிகா “நாங்கள் அப்படி எதுவுமே சொல்லவில்லை. கமல்சார்தான் அப்படி சொல்லி ப்ரதிப்புக்கு ரெட் கார்ட் கொடுத்தார்.” எனப் பேசியுள்ளார். இந்நிலையில் மீண்டும் ப்ரதீப் பிக்பாஸ் வீட்டுக்குள் திரும்ப உள்ளார் என தகவல்கள் வெளியாகின. ஆனால் அதற்கான அறிகுறிகள் எதுவும் இப்போது வரை தெரியவில்லை.
இப்போது பிக்பாஸ் இறுதிகட்டத்தை நெருங்கிவரும் வேளையில் போட்டியாளர்கள் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது. கடந்த் வாரம் கூல் சுரேஷ் எலிமினேட் செய்யப்பட்டார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களின் உறவினர்கள் வந்து அவர்களுக்கான அட்வைசை வழங்கிச் செல்கின்றனர்.
அந்த வரிசையில் போட்டியாளர் சரவண விக்ரம்மின் தந்தை பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து அனைவரின் கவனத்தையும் மொத்தமாகக் கவர்ந்துள்ளார். அவருக்கே இப்போது பிக்பாஸ் ரசிகர்கள் ஆர்மி தொடங்கினாலும் தொடங்குவார்கள் போல இருக்கிறது.
அவர் மாயாவை சந்தித்த போது அவருக்கு வணக்கம் வைக்க, “இதெல்லாம் கமல் சார் வேணும்னா நம்புவாரு . நான் நம்ப மாட்டேன் “ எனக் கூறி செம்ம பல்ப் கொடுத்துள்ளார். அப்போது பிக்பாஸிடம் கோரிக்கை வைக்கும் விதமாக கேமராமுன்பு பேசிய அவர் “என்னை ஒருவாரம் ஸ்பெஷல் கெஸ்ட்டாக இங்கு வரவையுங்கள். நான் என் பையன் மாதிரியெல்லாம் இல்ல. வேற மாதிரி விளையாடுவேன்” எனக் கூறி பிக்பாஸையே ஒருநிமிடம் ஜர்க் ஆகவைத்துள்ளார்.
இதெல்லாம் போதாது என்று தன் மகன் விக்ரம்மை ஒழுங்காக விளையாட சொல்லி அடிப்பதற்காக துரத்தியதெல்லாம் வேற லெவல் காமடி. இப்படி ஜாலி பண்ணிய அவரின் வீடியோக்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
