Wednesday, April 15, 2026
Home > Cinema > இன்னைக்கு நைட் ***** வேணுமா?… பிக்பாஸ் வீட்டில் எல்லை மீறி போகும் பூர்ணிமா ரவி!

இன்னைக்கு நைட் ***** வேணுமா?… பிக்பாஸ் வீட்டில் எல்லை மீறி போகும் பூர்ணிமா ரவி!

மாயா சுந்தர கிருஷ்ணன் ஒரு இந்திய நடிகை, விளம்பர நடிகை மற்றும் தமிழ் திரையுலகின் பின்னணிப் பாடகர் ஆவார். இவர் கல்லூரி இசைத் திரைப்படமான வானவில் வாழ்க்கை (2015) திரைப்படத்தில் அறிமுகமானார். மாயா தமிழ்நாட்டிலுள்ள மதுரையில் பிறந்தார். இவர் மதுரை டிவிஎஸ் லட்சுமி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர் பெங்களூரு அம்ரிதா பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றார்.

ஜேம்ஸ் வசந்தனின் வானவில் வாழ்க்கையில் அறிமுகமானபோது, மாயா நாடகத்திலிருந்து திரையுலகிற்கு நகர்ந்தார், “டிவாய்ட் ஆப் எக்ஸைட்மென்ட்” மற்றும்  மற்றும் “எ வேஸ்டட் எபோர்ட்” என்ற நாடகக்ங்களில் ஒரு பாடகராக நடிப்பதற்கு தனது முடியை வெட்ட வேண்டியிருந்தது. தொடரி படத்தில் பத்திரிகை நிருபராக நடித்தார், மேலும் துருவ நட்சத்திரம், 2.0, மகளிர் மட்டும் மற்றும் சர்வர் சுந்தரம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் விக்ரம் மற்றும் லியோ ஆகிய படங்களில் அவரின் கதாபாத்திரம் கவனம் ஈர்த்தது. தற்போது பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக இருக்கும் அவரை பற்றி பிரபல மாடல் அனன்யா ராம்பிரசாத் சில ஆண்டுகளுக்கு முன்னர் தன்னை பாலியல் ரீதியாக புகார் கூறியது இப்போது வைரல் ஆகிவருகிறது.

இந்நிலையில் இப்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் மாயாவும் பூர்ணிமா ரவியும் அடிக்கும் லூட்டிகள் தாங்க முடியாதவையாக உள்ளன. சமீபத்தில் பிக்பாஸ் வீட்டில் மாயா பற்றி எல்லை மீறி பூர்ணிமா அடித்த கமெண்ட்டும், அதற்கு சிரித்து வழிந்த மாயாவின் ரியாக்‌ஷனும் ரசிகர்களை அருவருக்க வைத்துள்ளன.

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான பிராவோவிடம் மாயா “can I have some Bravo?”எனக் கேட்டார். இதை நாம் ஆபாசமாகவோ இல்லை எல்லை மீறினதாகவோ எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் bravo என்ற வார்த்தை தைரியம் மற்றும் வெற்றியாளன் போன்றவற்றை குறிக்கும் சொல். இதை மாயா கேட்ட பின்னர் பூர்ணிமா அடித்த கமெண்ட்தான் ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.

அதில் பூர்ணிமா பிராவோவிடம் “Do you want some maya… tonight?” எனக் கேட்க மாயாவும் அதற்கு சிரிக்கிறார். அதாவது பிராவோவிடம் “இன்று இரவு உனக்கு மாயா வேண்டுமா?” எனக் கேட்கிறார். இதைக் கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

சமீபத்தில் தான் பிக்பாஸ் வீட்டில் பாதுகாப்பு இல்லை என சொல்லி சக போட்டியாளரான பிரதீப்பை ரெட் கார்ட் மூலமாக வெளியேற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி இருக்கையில் இப்படி ஆபாசமாக பேசும் பூர்ணிமா மீதும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என ரசிகர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.