Thursday, May 14, 2026
Home > Cinema > மஞ்சு வாரியருக்கு மகளுக்கு 24 வயதா!! இவ்ளோ பெரிய மகள் இருக்கிறாரா… வைரலாகும் புகைப்படங்கள்!

மஞ்சு வாரியருக்கு மகளுக்கு 24 வயதா!! இவ்ளோ பெரிய மகள் இருக்கிறாரா… வைரலாகும் புகைப்படங்கள்!

மலையாள சினிமாவின்  முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்த மஞ்சு வாரியர் மலையாள நடிகர் திலீப்பை திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து விலகினார். பின்னர் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தின் மூலம் ரி எண்ட்ரி கொடுத்தார்.

manju warrier daughter and her daughter

இதற்கிடையில் கருத்து வேறுபாடு காரணமாக திலீப்பை விவாகரத்து செய்தார். அதையடுத்து திலீப் காவ்யா மாதவனை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். திலீப்- மஞ்சு வாரியரின் மகளான மீனாக்‌ஷி திலிப்புடன் வசித்து வருகிறார்.

இரண்டாம் இன்னிங்ஸில் தமிழ் படங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகிறார் மஞ்சு வாரியர். அவர் நடித்த அசுரன் மற்றும் துணிவு ஆகிய படங்கள் மிகப்பெரிய அங்கிகாரத்தை அவருக்கு பெற்றுத் தந்தன. இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 படத்தில் நடித்து வருகிறார்.

manju warrier daughter Meenakshi Dileep

இந்நிலையில் மஞ்சு வாரியரின் மகளான மீனாக்சியின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகின்றன. டீனேஜ் பருவத்தில் இருக்கும் அவரைப் பார்ப்பதற்கு பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் போலவே இருப்பதாக ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.

விரைவில் அம்மா வழியில் மீனாட்சியும் சினிமாவுக்கு நடிக்க வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Manju warrier daughter Instagram