தெலுங்கு சினிமாவில் மட்டும் நடித்து வந்தாலும் இன்ஸ்டாகிராம் மூலமாகவே அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்தவர் இஷா ரெப்பா. இவர் 1990 ஆம் ஆண்டு தெலுங்கானாவில் வாரங்கலில் பிறந்தார். இவர் தனது பள்ளி படிப்பை முடித்து விட்டு எம்.பி.ஏ.யில் துறையில் முதுகலை பட்டம் பெற்றார்.இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார்.

அவரின் புகைப்படங்களைப் பார்த்து இயக்குனர் மோகன் கிருஷ்ணா தன்னுடைய அந்தகா முண்டு ஆதர்வதா என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் கதா நாயகியாக அறிமுகப்படுத்தினார். அதன் மூலம் தொடர்ந்து சிறப்பாக நடித்து,ஈஷா ரெப்பா தெலுங்கில் இளம் நடிகையாக வலம் வருகிறார்.

2012 ஆம் ஆண்டு லைஃப் இஸ் பியூட்டிஃபுல் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.பின்னர் 2016 ஆம் ஆண்டு ஓய் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஈஷா ரெப்பா. இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.

அதன் பின்னர் தெலுங்கில் அடுத்தடுத்து அமி துமி மாயா மால் , தர்சகுடு, பாண்டிபொடு, பிரமிப்பு, பிராண்ட் பாபு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.இந்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெற்றது.

கடந்த ஆண்டு ஜி.வி பிரகாஷ் நடிப்பில் ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் ஈஷா ரெப்பா.இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பின்னர் தமிழில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்தார்.

தெலுங்கில் அரவிந்த சமேதா வீர ராகவா, சுப்ரமண்யபுரம் மற்றும் நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் பிட்ட காதல் என்ற அந்தாலஜி படத்தில் நடித்திருந்தார்.தற்போது இவர் ஆயிரம் ஜென்மங்கள் என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.இதுமட்டுமல்ல ஓட்டு என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார.

இவர் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது கண்ணாடி அருகே நின்று வித்தியாசமான உடையில் அவர் கொடுத்துள்ள போஸ்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.


