Friday, April 17, 2026
Home > Cinema > ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகம்… இதல்லவா க்யூட்- அனுபமாவின் ரீசண்ட் போட்டோஷூட்!

ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகம்… இதல்லவா க்யூட்- அனுபமாவின் ரீசண்ட் போட்டோஷூட்!

பிரேமம் படத்தில் நடித்த மூன்று நடிகைகளுமே அந்த படத்துக்குப் பிறகு முன்னணி நடிகைகளாகியுள்ளன. இந்த திரைப்படம் மலையாள ரசிகர்களிடையே மட்டுமல்ல தெலுங்கில், தமிழ், கன்னட ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றி பெற்றது.

anupama parameswaran

பிரேமம் நாயகிகளில் ஒருவரான அனுபமா பரமேஸ்வரன் 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில்நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இவருடன் சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் என இரண்டு  கதாநாயகிகள் நடித்திருந்தனர்.

anupama parameswaran

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அனுபமா. இவர் தெலுங்கில் தேஜ் ஐ லவ் யூ, ஹாலோ குரு பிரமா கோசமே,‌ உன்னடி ஒகடே சிந்தகி போன்ற பல படங்களில் நடித்து தெலுங்கில் முன்னணி நடிகை என்று அந்தஸ்தை பெற்றார்.

anupama parameswaran

இவர் 2019 ஆம் ஆண்டு நடசார்வபௌமா என்ற  படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானார். இவர் தொடர்ந்து கன்னட மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். இடையில் கிரிக்கெட் வீரர் பூம்ராவை இவர் காதலிப்பதாக சில தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை அவரின் அம்மா மறுத்து வந்த நிலையில் பூம்ராவுக்கு வேறு ஒரு பெண்ணோடு திருமணம் நடந்தது. அதன் பின்னர் அனுபமா சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

anupama parameswaran

இவர் கடைசியாக தமிழில் 2021 ஆம் ஆண்டு தள்ளிப்போகாதே திரைப்படத்தில் அதர்வாக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் தெலுங்கில் நின்னு கோரி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.தற்போது தெலுங்கில் பேட் பாய்ஸ், பட்டர்பிளை,18 பேஜ் மற்றும் கார்த்திகேயா 2 போன்ற பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த கார்த்திகேயா 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

anupama parameswaran