பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை, குறிப்பாக விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் ரம்யா. இவர் ஓ கே கண்மணி உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் இவர் திருமணம் செய்துகொண்ட நிலையில் குறுகிய காலத்திலேயே கணவரையும் விவாகரத்து செய்தார்.

அதையடுத்து இப்போது திரைப்பட விழாக்களை தொகுத்து வழங்கி வரும் இவருக்கு சமூகவலைதளங்களில் மிகப்பெரிய அளவில் ரசிகர் கூட்டம் உள்ளது.

இந்நிலையில் இப்போது அவர் சந்தன நிற புடவையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.


