Friday, August 21, 2026
Home > Cinema > என் உடல் அமைப்பை ‘பேண்டா பாட்டில்’ என கேலி செய்கின்றனர்… நடிகை திவ்யபாரதி ஆதங்கம்!

என் உடல் அமைப்பை ‘பேண்டா பாட்டில்’ என கேலி செய்கின்றனர்… நடிகை திவ்யபாரதி ஆதங்கம்!

பேச்சிலர் படத்தின் மூலமாக அறிமுகமான திவ்யபாரதி தொடர்ந்து சில படங்களில் நடித்து வருகிறார்.

ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை திவ்யபாரதி.இந்த படத்தை சசியின் உதவி இயக்குனர் சதீஷ் இயக்கிருந்தார். இந்த படத்திற்காக ஜிவி பிரகாஷ் இசை அமைப்பாளராக  பணியாற்றி இருந்தார்.

நடிகை திவ்யபாரதி முதல் படம் போல் அல்லாமல் எதார்த்தமான நடிப்பை சிறப்பாக நடித்திருந்தார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகை திவ்யபாரதி கோயம்புத்தூர் பிறந்து வளர்ந்தவர். இவர் தனது கல்லூரி படிப்பை ஈரோடு பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரியில் படித்து முடித்தார். பின்னர் மாடலிங் பணியாற்றி வருகிறார்.இவர் ஒரு சில விளம்பர படங்கள், குறும்படங்களிலும் நடித்துள்ளார்.இவருக்கு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் மாடலிங் மூலம் வாய்ப்புகளை தேடி வந்தார்.இவர் பட வாய்ப்புக்காக மிகவும் கவர்ச்சியாக இருந்து வந்தார்.

அவர் நடித்த படங்கள் பெரியளவில் ஹிட் ஆகவில்லை என்றாலும், இன்ஸ்டாகிராமில் அவர் பகிரும் புகைப்படங்களின் மூலம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது அவர் தன்னுடைய உடல் அமைப்பை சிலர் பேண்டா பாட்டில் என கேலி செய்வதாகவும், இதனால் தன்னுடைய உடலை தானே வெறுக்கும் நிலைக்கு தான் நிர்பந்திக்கப் படுவதாகவும் கூறியுள்ளார். ஆனால் இதுபற்றியெல்லாம் கவலைப் படாமல் நாம் முன்னேறி செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.