நடிகர் கமல்ஹாசன் லேசான காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விக்ரம் வெற்றிக்குப் பிறகு கமல்ஹாசன் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார். அவரின் இந்தியன் 2 திரைப்படம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்து அவர் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நடிக்க உள்ள படம் தொடங்கப் பட உள்ளது.
இதையடுத்து ஹெச் வினோத், கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தில் கமல்ஹாசன் நடிப்பாரா இல்லை வேறு நடிகர்கள் நடிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் கமல் அடுத்து மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.
இப்படி நடிப்பு ஒரு பக்கம், பிக்பாஸ் ஒரு பக்கம், சினிமா ஒரு பக்கம் என பிஸியாக இருக்கும் கமல், லேசான காய்ச்சல் காரணமாக இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
