Friday, May 15, 2026
Home > Cinema > விஜய்க்கு அண்ணியாக நடிக்கும் வாய்ப்பைத் தவிர்த்த சினேகா.. ஆனா ஜோடியாக நடிக்க உடனே வந்த வாய்ப்பு!

விஜய்க்கு அண்ணியாக நடிக்கும் வாய்ப்பைத் தவிர்த்த சினேகா.. ஆனா ஜோடியாக நடிக்க உடனே வந்த வாய்ப்பு!

தமிழ் சினிமாவில் புன்னகை இளவரசி என புகழப்படுபவர் சினேகா. 2000 களில் பல முன்னணி நடிகர்களோடு நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தவர் சினேகா. அவர் நடித்த விரும்புகிறேன், வசூல் ராஜா, புதுப்பேட்டை என ஏராளமான படங்கள் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன. அவரின் அறிமுகப் படமாக சுசி கணேசன் இயக்கிய விரும்புகிறேன் திரைப்படம் அமைந்தது.

சினேகாவின் தனித்தன்மை அவரி கிளா மர் ரோல்களை தேர்ந்தெடுக்காமல் பெரும்பாலும் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்ததுதான். அப்படி ஹோம்லியான வேடங்களில் நடித்த அவர் புதுப்பேட்டை உள்ளிட்ட சில படங்களில் மட்டும் கவர்ச்சியாக நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்தார். ஆனால் அந்த வேடத்திலும் அவர் தன்னுடைய சிறந்த நடிப்பைக் கொடுத்திருந்தார்.

திருமணத்துக்குப் பிறகு சினிமாவை விட்டு விலகிய அவர் இப்போது சீரியல், சின்னத்திரை நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் வாரிசு படத்தில் விஜய்க்கு அண்ணியாக நடிக்க சினேகாவுக்கு வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் அவர் அந்த வாய்ப்பை வேண்டாம் என மறுத்துள்ளார். இதை அவரின் கணவர் பிரசன்னா தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இப்போது விஜய்யின் GOAT படத்தில் அவருக்கு ஜோடியாகவே நடிக்க வாய்ப்பு அமைந்துள்ளது. இந்த படத்தில் முதிய விஜய்க்கு ஜோடியாக சினேகா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.