Monday, May 19, 2025
Home > Cinema > நாகார்ஜூனா தா சரி !! பாடி ஷேமிங் பத்திக் கண்டுக்காத கமல்… தெலுங்கு பிக்பாஸ் வீடியோவை பகிர்ந்து ஆண்டவரை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!

நாகார்ஜூனா தா சரி !! பாடி ஷேமிங் பத்திக் கண்டுக்காத கமல்… தெலுங்கு பிக்பாஸ் வீடியோவை பகிர்ந்து ஆண்டவரை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!

தமிழ் பிக்பாஸ் சீசன் 7 தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த பிக்பாஸில் கலந்துகொண்டிருக்கும் போட்டியாளர்களில் ஒருவரான நிக்சன் பெண்களிடம் அசடு வழிவதில் வல்லவராக இருந்து வருகிறார்.

கடந்த வாரத்தில் நிக்சன் சக போட்டியாளரான வினுஷாவை பாடி ஷேமிங் செய்தது அருவருப்பை ஏற்படுத்தியது. ஆனால் வார இறுதி நாட்களில் வந்த கமல்ஹாசன் இதைக் கண்டித்து கேள்விகள் கேட்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள்.

`

ஆனால் கமல் அதை கண்டுகொள்ளவே இல்லை. இது ரசிகர்களுக்கும் வினுஷா ஆதர்வாளர்களுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. கடந்த சீசன்களில் கமல் மிகச்சிறப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நிலையில் இந்த சீசனில் அவர் சொதப்பி வருவதாக கமெண்ட்கள் எழுந்துள்ளன.

```
```

பிரதீப்புக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டதில் கூட கமல்ஹாசன் தவறு செய்துவிட்டதாக கமெண்ட்கள் எழுந்தன. இந்நிலையில் இப்போது நிக்ஸனை கண்டிக்காமலும் கமல் அடுத்த தவறை செய்துள்ளார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுபோல மோசமாக ஒரு பெண்ணின் உடலை பற்றி மோசமாக கமெண்ட் அடித்த ஒரு போட்டியாளரை அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நடிகர் நாகார்ஜுனா கோபத்தில் வெளுத்து வாங்கும் வீடியோ இப்போது இணையத்தில் பரவி வருகிறது. இதைப் பகிரும் ரசிகர்கள் பலரும் நிகழ்ச்சியை எப்படி தொகுத்து வழங்குவது என்று நாகார்ஜுனாவைப் பார்த்து கமல் கற்றுக்கொள்ள வேண்டும் என ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.